குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூலான Judgeஆக இருக்கும் தாமுவின் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

12

தமிழ் சினிமா ரசிகர்களிடம் சமையல் என்று சொன்னதுமே மக்களுக்கு முதலில் நியாபகம் வரும் பிரபலம் செப் தாமு.

2010ம் ஆண்டு ஒரு நபர் அதிக நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

பாம்பே தாஜ் ஹோட்டலில் தனது சமையல் பயணத்தை முதன்முதலில் தொடங்கியலர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் தோன்றியுள்ளார்.

Ph.D. Catering Science And Hotel Management இவர் படித்துள்ளாராம். சுவையோ சமையல், அடுப்பங்கறை, சமையல் தர்பார், கலர்ஸ் கிட்சன், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.

அதேபோல் உள்குத்து, சர்வர் சுந்தரம், ஒரு பக்க கதை என சில படங்களில் நடித்துள்ளார்.

சமையல் கலைஞர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து நடுவராக கலக்கி வருகிறார்.

மிகவும் பிரபலமாக இருக்கும் இவருக்கு இன்று பிறந்தநாள், தற்போது அவரது சொத்து மதிப்பு விவரம் ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு கணக்குப்படி இவரின் சொத்து மதிப்பு 4 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது.

Comments are closed.