அந்த தப்பை மட்டும் செய்யாதீர்கள்.. எமோஷனலான பிரபுதேவா.. காரணம் இதுதானா

11

தமிழ் சினிமாவில் முதலில் டான்ஸராக அறிமுகமாகி பிறகு ஒரு நடிகராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் இயக்குனராக தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

தனது நடன திறமை மூலம் பல ரசிகர்களை சம்பாதித்து பிரபலமான பிரபுதேவா தற்போது, விஜய் நடிப்பில் வெளியாகும் GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ள பிரபு தேவா முதல் முறையாக அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரபுதேவா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க..

அந்த பேட்டியில் அவர், நான் என் பிள்ளைகள் மீது அதிகமாக பாசம் வைத்துள்ளேன். ஆனால் அந்த தவறை மட்டும் வாழ்க்கையில் யாரும் செய்து விடாதீர்கள். பிள்ளைகள் மீது அதிகமாக பாசம் வைத்தால் பிறகு அவர்களுக்கு சின்ன விஷயம் என்றால்கூட அதை தாங்க நம்மால் முடியாது.

மேலும், அவர்களை நன்றாக வளர்க்க வேண்டும் என்று யோசித்து நம்மால் ஃப்ரீயாக வாழ முடியாது. அதனால் பிள்ளைகள் மீது அதிகமான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறினார்.

Comments are closed.