நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்

11

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான (Karunarathna Paranawithana) சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து தலதா அத்துகோரல (Thalatha Athukorala) அண்மையில் விலகியிருந்தார்.

இதனையடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்காகவே அவர் நியமிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தலதா அத்துகோரல தனது பதவியிலிருந்து விலகுவதாக ஓகஸ்ட் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவாதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கருணாரத்ன பரணவிதான 36,787 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.