ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சி நெறிகள்: கிடைத்தது அங்கீகாரம்

11

நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்க அரசு அங்கீகாகரம் அளித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) அமைச்சரவைவில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டமானது, விஞ்ஞானம் (Scienece), தொழில்நுட்பம் (Technology), கணிதம் (Methametics), கலை (Arts) மற்றும் கணிதம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்டீம் (STEAM) கருத்தை மையமாகக் கொண்டு கல்வி முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை மாணவர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வியை வழங்க உதவுவதே குறித்த பயிற்சித் திட்டத்தின் நோக்மாகும்.

அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களிலும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 7,500 ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக Skills College of Technology (SCOT CAMPUS) எனும் நிறுவனத்தின் மூலம் பயிற்சிகள் நடத்தப்ப்படவுள்ளன.

அத்துடன், தகவல் தொழில்நுட்பம், மெகாட்ரானிக்ஸ் (Mechatronics Engineering) மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகளில் பயிற்சிகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ள குறித்த பயிற்சி நிறுவனம் முன்வைத்துள்ள ஆரம்பநிலை முன்மொழிவு திட்டம் வெற்றியளித்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.