செப்டெம்பர் மாதத்திற்கான முதல் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 152,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 62,000 மில்லியன் ரூபா உண்டியல்களும் வழங்கப்படவுள்ளது.
மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
Comments are closed.