மோகன்லால் கோட் படத்தில் நடிக்கிறாரா.. வைரலாகும் புகைப்படம்.

15

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த வாரம் செப்டம்பர் 5 -ல் வெளிவர உள்ள படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், வெங்கட் பிரபு மற்றும் மோகன்லால் இருவரும் சந்தித்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கோட் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போகிறாரா என்று கேள்விகள் எழுப

ஆனால், அந்த படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதில்லை என்றும், மோகன்லால் நடித்துள்ள பரோஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் காரணமாக மோகன்லால் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்னை வந்ததாகவும் அப்போது, மோகன்லால் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் சந்தித்து இந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.