யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

12

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்போது, பத்மநாதன் ஐங்கரன் என்ற 50 வயதான குடும்பஸ்தரே நேற்று(26.08.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் தனது மகனை தனியார் வகுப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை , நேற்று முன்தினம்(25) பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் நேற்று(26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.