ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் சஜித்

14

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் உன்னதமான சட்டத்தை நீதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையின் ஊடாக ஜனாதிபதி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை உரிமைகளை மீறிய ஒர் வேட்பாளராகவே இம்முறை ரணில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியவர்களுக்கு தமது அரசாங்க ஆட்சியில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடும் என சஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.