சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் நிஜ வாழ்க்கையில் இணைந்த செந்தில்-ஸ்ரீஜா பிரிய முடிவெடுத்தார்களா?… அவர்களே சொன்ன காரணம்

14

படங்களிலோ, சின்னத்திரையிலோ ஒரு ஜோடி ஹிட்டாகிவிட்டது என்றால் மக்கள் உடனே அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தான் எதிர்ப்பார்ப்பார்கள்.

அப்படி சினிமாவில் நாம் ரசித்த பல ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளார்கள். அப்படி சின்னத்திரையில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

மக்கள் காதலர்கள் என கொண்டாட அவர்களோ நாங்கள் நல்ல நண்பர்கள் என கூறி வந்தார்கள். ஆனால் திடீரென யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு தேவ் என்ற மகன் பிறந்தார்.

இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக ஜோடியாக பேட்டி கொடுத்துள்ளார்கள்.

அதில் ஸ்ரீஜா பேசும்போது, கேமராவுக்காக வேண்டுமென்றால் பொய் சொல்லலாம், ஆனால் உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்து இருக்கிறது, மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டோம்.

இப்போதும் சண்டை போட்டுக்கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் மகன் பிறந்து விட்டதால் சண்டைக்கு அதிகமான நேரம் கிடைக்கவில்லை. சண்டை மோசமாக ஆக சில முறை பிரிந்து விடலாமா என்று கூட யோசித்து இருக்கிறோம்.

ஆனால் அதனை கடந்து மீண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று எனக்குள் தோன்றும், என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன்.

உங்கள் உறவில் அந்த மேஜிக் வந்துவிட்டால் போதும், என்ன ஆனாலும் சரி அந்த உறவு நம்மை விட்டுப்போகாது என்று பேசியுள்ளார்.

Comments are closed.