பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) ஒரு நாளைக்கு 7 மணிநேரம் நடப்பதன் மூலம பணம் ஈட்டக் கூடிய ஒரு வேலையை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விடயங்களைச் செய்யப் பழக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு தயாரிக்கப்படும் குறித்த ரோபோக்களுக்கு, மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தருவதற்காக குறித்த வேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வேலைக்கு இலங்கை மதிப்பின் படி சுமார் 01 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்சர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும் எனவும் அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.