இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணி ரத்னம் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

16


பல்லவி அணு பல்லவி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணி ரத்னம். கன்னடத்தில் வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் Unaroo எனும் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பின் தான் தமிழ் சினிமாவில் பகல் நிலவு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் இயக்குனர் மணி ரத்னம். இப்படத்தை தொடர்ந்து மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

பல ஆண்டுகளாக எடுக்க முயற்சி செய்து எடுக்கமுடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையையும், மணி ரத்னம் தான் பல போராட்டங்களுக்கு பின் திரையில் படமாக கொண்டு வந்தார். இரண்டு பாகங்களாக வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

மேலும் தற்போது கமல் ஹாசனை வைத்து தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூன்றுகாட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணி ரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1,200 கோடி இருக்குமாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.