முக்காடு போட்ட VJ பிரியங்கா.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க! குக் வித் கோமாளி 5ல் இன்று நடந்த சம்பவம்

34

குக் வித் கோமாளி 5ல் இன்றைய எபிசோடில் ஆரம்பம் முதலே புகழ் மற்றும் பிரியங்கா ஆகியோர் இடையே சண்டை நடப்பது போல தான் காட்டி இருக்கிறார்கள்.

இது உண்மையான சண்டையா, இல்லை இயக்குனர் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டா என்பது போல தான் அவர்கள் வாக்குவாதம் இருந்தது.

தனது கோமாளியை மாற்றிவிட்ட புகழ் மீது பிரியங்கா கோபமாக பேசுகிறார். புகழ் இதுவரை செஃப் ஆப் த வீக் ஒரு முறை கூட வாங்கவில்லை என சொல்லி அசிங்கப்படுத்துகிறார்.

அனைவரும் சமையல் செய்து முடித்தபிறகு அதை நடுவர்கள் ருசித்து பார்த்து ரிசல்ட் அறிவித்தனர். விடிவி கணேஷ் டேஞ்சர் ஸோனுக்கு செல்கிறார் என நடுவர்கள் அறிவித்தனர்.

அதன் பின் செஃப் ஆப் த வீக் டைட்டில் சுஜிதா அல்லது திவ்யா துரைசாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிரியங்கா சவால் விட்டதற்காக ஜெயிப்பது போல புகழ் மற்றும் சுஜிதா ஜோடிக்கு தான் செஃப் ஆப் த வீக் டைட்டில் கொடுக்கப்பட்டது.

பிரியங்கா வேறு வழி இல்லாமல் அப்போது முக்காடு போட்டுக்கொண்டார்.

Comments are closed.