ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் : வெளியாகியுள்ள அறிவிப்பு

14

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை மீறினால் ஜனாதிபதியின் அலுவலகத்தை கூட பறிப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பாக கொழும்பில் (Colombo) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் பிரச்சாரச் செலவுகளைச் செய்வது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் செலவுகள் தொடர்பாக கண்காணிப்பு அமைப்புகள் சிறப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.