ஸ்வீடன் (Sweden) தனது சொந்த குடிமக்களுக்கு நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்துகிறது.
ஸ்வீடன் குடிவரவு அமைச்சர் மரியா மல்மர் ஸ்டான்கார்ட் (Maria Malmer Stenergard) இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது சொந்த குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஸ்வீடன் முன்வந்துள்ளது.
அதாவது, ஸ்வீடன் கலாச்சாரத்தை விரும்பாதவர்கள் அல்லது இங்கு ஒன்றிணைந்து இருக்க முடியாதவர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பணமும் செலுத்துகிறது என ஐரோப்பிய வலைத்தளமொன்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்த விதி வெளிநாட்டிலிருந்து வந்து ஸ்வீடனில் குடியேறும் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ், இந்த விதி நாட்டில் பிறந்த குடிமக்களுக்கும் பொருந்தும்.
இந்த புதிய விதிகளின்படி, ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறும் ஒருவருக்கு 10,000 Swedish crowns ( இலங்கை பணமதிப்பில் ரூ .285,500)பணமாக கொடுக்கப்படுகின்றது.
குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறினால் அதில் பாதி (5000 Swedish crowns) கிடைக்கும். இது தவிர, அவர்களது பயண செலவுக்கும் பணம் தரப்படும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இந்த பணத்தை ஒரே நேரத்தில் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.