கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (Bandaranaike International Airport) ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு விமான நிலைய பேருந்து சேவைக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது விமான நிலைய – கோட்டை பேருந்து ஊழியர் சங்கத்தினரால் நேற்று (16.07.2024) நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர, “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை வழங்க முடியாது.மேலும், புதிய பேருந்துகளுக்கும் இது பொருந்தும்.
தொழிற்சங்கத்தின் கீழ் 71 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 பேருந்துகள் நாளாந்தம் இயங்குவதில்லை என்றும், மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே இயங்குகின்றது.
தமது ஒன்றியம் இதற்கு முன்னர் விமான நிலைய பேருந்து சேவையை ஆரம்பித்திருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்டது.
குறித்த பேருந்துகள் தேவையில்லை என மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
உண்மையான தேவை இருப்பின் தற்போது ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நாளாந்தம் இயங்காத 42 பேருந்துகளை புதிய சேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.