உலகத்துல ஒரே ஒரு ஆம்பள கார்த்திக் குமார் தான்..! சட்டென பல்டி அடித்த சுசித்ரா

12

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல பாடகியாக திகழ்ந்தவர் தான் சுசித்ரா. இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறந்த பாடல்களையும் ஹிட் பாடல்களையும் கொடுத்திருந்தார். ஒரு சில காலம் புகழின் உச்சியிலேயே காணப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் சுச்சி லீக்ஸ் என்ற விவகாரத்தின் எதிரொலியால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் தலைகாட்டாமல் இருந்தார் சுசித்ரா.

ஆனாலும் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷ், திரிஷா, அனிருத், அண்ட்ரியா மற்றும் தனது முன் கணவர் கார்த்திக் குமார் ஆகியோரை பற்றி படுமோசமாக விமர்சித்து இருந்தார். அதிலும் தனது கணவரும் தனுஷும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று புரளியை கிளப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதேபோல த்ரிஷா பற்றியும் படுமோசமாக கூறியிருந்தார். விஜயும் திரிஷாவும் லிப்ட் ஒன்றில் போட்டோ எடுத்துக் கொண்ட விஷயத்தை சுட்டிக்காட்டி விஜய்யை த்ரிஷா மடக்க பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். சமீப காலமாகவே சுசித்ராவின் பேட்டிகள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது உலகத்திலேயே சிறந்த ஆண்மகன் என்றால் அது தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் என தனது youtube சேனலில் பதிவிட்டுள்ளாராம் சுசித்ரா.

அதாவது சமீபத்தில் கார்த்திக் குமாரை அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று சுசித்ரா கூறிய நிலையில், சுசித்ராவுக்கு பைத்தியம் என்றும் அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கார்த்திக் குமார் கடுங் கோபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து கார்த்திக் குமார் தான் ஆம்பளை என குறிப்பிட்டுள்ள சுசித்ரா, தான் பைத்தியம் பைத்தியம் எனக் குறிப்பிடும் கார்த்திக் குமார் இப்போது மட்டுமே மன்னிப்பு கேட்க சொல்லுகிறார் எனவும் விளாசி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வருகின்றது.

Comments are closed.