இலங்கையில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபா சம்பளம் வழங்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பின் போது சம்பள உயர்வுக்கு ஆதரவாக 14 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 3 பெருந்தோட்ட நிறுவனங்கள் வாக்களித்துள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், வருகை ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
Comments are closed.