சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல்

14

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கையெழுத்திட்ட இந்த அறிவித்தலில், எதிர்வரும் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குச்சீட்டில் பயன்படுத்தும் சின்னங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டவை மற்றும் எதிர்கால ஒதுக்கீட்டிற்கு கிடைக்கக்கூடியவை என்ற அடிப்படையில் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது 1981ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.