தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜனாதிபதி அறிவிப்பு

14

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்குவதற்கு 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தொழிலாளர் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமானால் விசேட சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.