பிக் பாஸ் என்றாலே சர்ச்சை சண்டைக்கு பஞ்சமே இருக்காது. அதனால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகிறது.
தமிழில் கடந்த 7 சீசன்களாகத் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த 8வது சீசனில் இருந்து விலகுவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
கமல் ஹாசனுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்த 8வது சீசன் சரத்குமார் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்று சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.