பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென அறிவித்தல் வெளியாக உள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாக உள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும்.
2023 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 64.33 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது (Jaffna Hindu College) 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.
மேலும், வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
Comments are closed.