ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்.. என்ன தெரியுமா?

12

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது படங்களின் மூலம் சிறப்பாக செயல்பட்டு, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவர் பாட்டுக்கு பல இளம் ரசிகர்கள் உள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கும் தனது மூன்றாவது படத்திற்கு கடைசி உலக போர் என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்காக ஆதி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இந்த படம் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அதிக பட்ஜெட் படம் என்று என கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அனகா நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 9ஆம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஹிப்ஹாப் ஆதி தயாரித்து, இயக்கி, நடிக்கும் முதல் படம் இது என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பார்ப்பை ஆதி பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Comments are closed.