நயன்தாரா படத்தில் நடிக்க கவினுக்கு இவ்ளோ சம்பளமா? எவ்ளோ தெரியுமா..

15


தற்போது கவின், தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். ஸ்டார் படத்தை தொடர்ந்து இவர் கிஸ், மாஸ்க் போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு இடவன் இயக்கத்தில் கவின் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

வயதில் தன்னை விட அதிகமாக இருக்கும் அழகான பெண்ணிடம் காதல் கொள்வது போன்று படத்தின் கதை அமைந்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக கவினுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

Comments are closed.