நாமல் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட மகிந்தவின் சகா

11

மக்களினதோ அல்லது கட்சியினதோ தேவைக்கு அமைய நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கும், 2022 ஆம் ஆண்டு கலவரங்களுக்கும் நாமல் ராஜபக்சவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென குற்றம் சுமத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை விடவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச மீதே மக்களுக்கு அதிக கோபம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சஜித்திற்கு மறைமுகமாக உதவும் செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை தாம் சந்தித்த போது “நாமலுக்கு விசர்” என மகிந்த கூறியதாக பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.