தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் இந்தியளவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்து வருகிறார். கவினுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் சமீபத்தில் கமிட் செய்துள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா, ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால், மலையாள திரைப்படங்களில் நடிக்க மட்டும் கம்மியான சம்பளம் தான் வாங்கி வருகிறாராம். அதாவது தமிழில் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, இதிலிருந்து பாதி அளவு தான் மலையாள படங்களில் நடிக்க நயன்தாரா சம்பளமாக வாங்கி வருகிறார் என மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
தன்னுடைய சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க கம்மி சம்பளம் வாங்கி வருவதாகவும், தமிழில் நடிக்க ரூ. 10 கோடி ரூ. 12 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும் அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.