சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை

15

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலையன்ஸ் ஏர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு காலை வேளையில் விமான சேவையை தொடங்கியது.

இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.

வாரத்தில் 4 நாட்கள் அதுவும் ஒரு முறை மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

Comments are closed.