இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7, 2024, குரோதி வருடம் ஆடி 22, புதன் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள திருவோணம், அவிட்டம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நிதி விஷயங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று வீட்டில் விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலைக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சமூகம் மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். தேர்வு தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து எடுபடுவீர்கள். வேலை தொடர்பாக பயணம் செல்ல வேண்டியது இருக்கும். கலை, இலக்கியம் தொடர்பான வேலையில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். நிமிடத்தில் மூத்தவர்களின் உதவியாள் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் அனுபவத்தால் வேலை, வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று திறமையுடனும், புத்திசாலித்தனத்தோடும் முயற்சி செய்ய சிறப்பான வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். பொழுதுபோக்கிற்காக அதிக நேரம் செல்லவிடுவீர்கள். சில அத்தியாவசியமான பொருட்கள் வாங்கும் விஷயத்தில் பணம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது. இன்று அரசியலில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சமூக மற்றும் அரசியலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வீண் செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். உத்தியோகம் மற்றும் தொழில் உங்களின் திட்டங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொந்த தொழில் செய்யக் கூடியவர்கள் தந்தையின் ஆலோசனையால் முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடன் பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். பொறுமையாக செயல்படவும். பணியிடத்தில் சில மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான நாளாக அமையும். பிறரிடம் சிக்கி உள்ளவர்களின் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. ஆன்மீக சுப காரியங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான தடைகள் நீங்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். இன்று எதிலும் கடின உழைப்பு தேவைப்படும். ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம். இன்று முதலீடு விஷயத்தில் சரியாக திட்டமிட்டு செயல்படவும். எதிர்காலம் தொடர்பாக ரிஸ்க் எடுக்க வேண்டியது இருக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தமான மனக்கசப்பு ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தைரியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். ரியல் எஸ்டேட், வியாபாரத்தில் லாபகரமான நாளாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்புடையவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளில் திட்டமிட்டு செயல்படவும். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்களின் செல்வாக்கும், கௌரவமும் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் வேலைகளை செய்து முடிப்பது சில சிக்கல் ஏற்படும். இன்று உங்களின் உடல்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழலாம். அதனால் உங்கள் வேலையை சரியான நேரத்தில், சரியாக செய்து முடிக்கவும். இன்று சொத்து, பயணங்கள் தொடர்பான விஷயத்தில் ஆவணங்களை சரி பார்க்கவும். இன்று உறவில் ஒரு சில ஏற்படலாம் என்பதால் உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி, பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.. பிள்ளைகளின் விஷயத்தில் மகிழ்ச்சியான செய்திகளை கேட்பீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடிய நாள். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல், சமூகம் தொடர்பான நபர்களுக்கு மரியாதை கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களிடம் கவனமாக பேசவும். மாமியார் வழியில் மரியாதை கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று கவலை தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. இன்று குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். இருப்பினும் அது தொடர்பாக அலைச்சல் ஏற்படும். உங்களின் திறமையை நிரூபிக்க முடியும். வாழ்க்கைத் துணையின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்றைய அதிக செலவு காரணமாக கடன் வாங்க வேண்டியது இருக்கும். உங்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிப்பது கடினமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். முதலீடு தொடர்பாக அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.
Comments are closed.