ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் சலூன் கதவு வழியாக கட்சிக்கு வரவும் முடியும் அங்கிருந்து செல்லவும் முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேனவுக்காக நிபந்தனையின்றி குரல் கொடுத்ததாகவும், தான் விரும்பிய பதவிகளை வழங்குவதற்காக அவர் போராடியதன் விளைவாக ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் நாமல் தெரிவித்தார்.
அன்று, எஸ்.எம். சந்திரசேனவுக்கான அமைச்சு பதவியை பெற, பசில் ராஜபக்ஷ நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஏதாவது மனக்கசப்பு இருந்தால் அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
சந்திரசேனவிற்கு பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதும் ரணிலுடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு காரணமாக மாறியதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.