இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 5 August 2024

14

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஆகஸ்ட் 5, 2024 திங்கட் கிழமை) இன்று சந்திரன் பகவான் கடகம், சிம்மம் ராசியில் ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று தனுசு ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 5, 2024, குரோதி வருடம் ஆடி 20, திங்கட் கிழமை, சந்திரன் கடகம், சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. அலுவலக வேலைகளை கவனமாக செய்யவும். எதிரிகள் தீங்கு விளைவிக்க முயற்சி செய்வார்கள். வியாரிகளுக்கு லாபம் உண்டாகும். சகோதரரின் உடல் நிலையில் கவலை தரும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவதோடு, குடும்பச் சூழலும் நிம்மதியாக இருக்கும். தொழிலதிபர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், ஆவணங்களை கவனமாகப் படித்து பின் செயல்படவும். நிர்வாகத் துறையில் புதிய சக ஊழியர்களைப் பெறுவீர்கள், உங்கள் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சில குடும்ப உறுப்பினர்களால் வேலைப்பளுவும் தேவையற்ற கவலையும் ஏற்படும். வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து வெற்றி அடைவீர்கள். நிதி நிலைமை சாதகமானதாக இருக்கும். நாள் முழுவதும் சிறிய லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வேலைக்காக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். இன்று உற்றார் உறவினர்களின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்திலிருந்து நீங்கள் நல்ல நிதிப் பலன்களைப் பெறலாம். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். இன்று, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் அனுபவத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் நாளாக இன்று இருக்கும். இன்று, உங்கள் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தின் பெரியவர்கள் இந்த சூழ்நிலையை கையாளுவார்கள். மாணவர்களின் நடைமுறைச் சிந்தனை மேம்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை மாற்றுவது தொடர்பான விஷயத்திற்கு இன்று நல்ல நாள் அல்ல. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நேரத்தில் சில தடைகள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயத்தில் கவனம் தேவை. வீட்டின் வசதிகளை மேம்படுத்த நினைப்பீர்கள். கடன் வாங்க விரும்புபவர்களுக்கு உதவி கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலுடன் தொடர்புடையவர்களின் செல்வாக்கால் புதிய வாய்ப்புகள் உருவாகும். இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாலையில் நல்ல செய்திகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நெருங்கிய நண்பரின் உதவியுடன், தடைப்பட்ட வேலையை நீங்கள் சரிசெய்யலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு மகிழ்ச்சியான பலன்களைப் பெறுவார்கள். உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். மாலையில் நல்ல செய்திகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நெருங்கிய நண்பரின் உதவியுடன், தடைப்பட்ட வேலையை நீங்கள் சரிசெய்யலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு மகிழ்ச்சியான பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும், இது உங்களுக்கு மன அமைதியை தரும். இன்று உங்கள் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று திடீர் செல்வம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். குடும்ப உறவுகளில் கசப்பு ஏற்படும். உங்கள் மனைவியுடன் உறவு மேம்படும். ஒழுக்கக்கேடான செயல்களில் இருந்து விலகி இருங்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று குடும்ப பிரச்சனைகளை நீங்களே தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றப் பாதை அமையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள், மன அமைதி பெறுவீர்கள். சமூகப் பணிகளில் பங்களிப்பு குறைவாக இருக்கும், இன்று மரியாதை அதிகரிக்கும்.. குடும்பச் சொத்து பெறுவது தொடர்பான வாய்ப்புகள் உள்ளன. பிறரிடம் சென்று உள்ள பணம் திரும்ப கிடைக்கும். இன்று உங்கள் வேலையில் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான நிதி சிக்கல் தீரும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் தேடி வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். நேரத்தை சொலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாய் வழியிலும் பணம் வர வாய்ப்பு உண்டு. யாரிடமும் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கி சமூகத் துறையிலும் மரியாதை கிடைக்கும். உங்கள் புகழ் எங்கும் பரவும். இன்று வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொழுதுபோக்கில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இன்று பணியிடத்தில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

Comments are closed.