முறைகேடுகள் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ரத்து செய்ய தீர்மானம்

20

ஜனாதிபதி தேர்தல் (Presidential Election) நடைறும் நேரத்தில் முறைகேடுகள் மற்றும் கருத்து மோதல்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களிலும் இவ்வாறான வாக்குச்சவாடிகள் இரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commision) சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலின் போது பொதுவாக தேர்தல் வன்முறைகள் பதிவாகும் சுமார் 20 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதில் இந்த ஆண்டு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.