யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி, தற்போது நட்சத்திர நடிகர் ரேஞ்சிற்கு மாறியிருப்பவர் தான் இர்பான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தனது மனைவியின் கருவில் இருக்கும் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று கண்டறிந்து வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டு வீடியோ பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் இர்பான் மற்றும் இன்னொரு பிரபல யூடியூபர் பிரியாணி மேன் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறியது.
இப்படி தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி வரும், இர்பான் தற்போது மற்றோரு பிரச்சனையில் சிக்கிவிட்டார்.
அது என்னவென்றால், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய, முறையான நம்பர் பிளைட் இல்லாத காரணத்தால் சென்னை போக்குவரத்து காவல்துறை, யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்துள்ளது.
Comments are closed.