பாடல்கள் அப்டேட் வந்தது, விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் எப்போது?…. வெங்கட் பிரபு சொன்ன தகவல்

26


தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் கோட் படம் தான்.

AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

யுவன் இசையமைப்பில் தான் படம் தயாராகி வருகிறது. இன்று மாலை 7 மணியளவில் விஜய்யின் கோட் படத்தின் 3வது சிங்கிள் பாடலின் புரொமோ வெளியாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

அண்மையில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கோட் படத்தின் டிரைலர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், தயாரிப்பு தரப்பில் இருந்து எப்போதுமே ஒரு படத்தின் டிரைலரை 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் கோட் படத்தின் டிரைலரும் 2 வாரங்களுக்கு முன் அல்லது 10 நாட்களுக்கு முன் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 19 கோட் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Comments are closed.