எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்ததாக கூறப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு மாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இதன் பின்னணியில் உள்ள உண்மையை பிரேமதாச வெளிப்படுத்த வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், எதிர்வரும் நாட்களில் பரபரப்பான செய்திகள் வரும் என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றார் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வோட்டர்ஸ் எட்ஜில் இருந்து வெளியே வந்ததை சில ஊடகவியலாளர்கள் பார்த்தமைப் போன்ற நாடகங்களை விரைவில் பார்க்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments are closed.