ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

15

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு, பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் நேற்று(31) இடம்பெற்றது.

இந்த தருணத்தில் விருந்தகத்தில் இருந்து தலதா அத்துக்கோரள வெளியே வந்தபோது அங்கு செய்தி சேகரிப்புக்காக காத்திருந்த செய்தியாளர்கள், தலதாவிடம் கேள்விகளை எழுப்பினர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பீர்களா என்ற வினாவை அவர்கள் தொடுத்தனர். எனினும் தாம் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஜனாதிபதி விக்ரமசிங்கவை ஆதரிக்கும் கூட்டத்துடன் தாம் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதியுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த காலங்களில் அவருடன் பேசி இருக்கிறேன். இன்றும் அதைச் செய்கிறேன். நாளையும் அப்படித்தான் இருக்கும் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.  

Comments are closed.