செய்தி – ஈழம் றஞ்சன்
இலங்கையர் ஒருவர் தனது தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் உயிரிழந்தமை தொடர்பில் பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பிரித்தானிய உள்துறை அமைச்சின் தவறான செயற்பாடு காரணமாக சுதர்சன் இதயச்சந்திரன் என அடையாளம் காணப்பட்ட தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் உயிரிழந்துள்ளார்.அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
41 வயதான அவர் தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார் மற்றும் பன்னாட்டு சில்லறை விற்பனை நிலையமான டெஸ்கோவில் சட்டவிரோதமாக பணிபுரிந்தார்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சுதர்சன் இதயசந்திரன் என்பவர் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆண் பெண் குழந்தைகளை விட்டு விட்டு அவர் பிரித்தானியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது.குடும்பத்தின் மூவரும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களாகும். சுதர்தன் தனது திருமண நாளில் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் நவம்பர் 2023 ம் ஆண்டு இடம்பெற்ற குடிவரவு தீர்ப்பாயத்தில் நீதிபதி பொனெவெரோ சுதர்சன் இதயசந்திரனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டதுடன் அவருக்கு குடும்பத்துடன் இணைவதற்கான உரிமை உள்ளது என தெரிவித்தார்.பிரித்தானியாவில் உள்ள குடும்பத்தினருடன் வாழ்வதற்கு சுதர்சன் இதயசந்திரனிற்கு உரிமையுள்ளதாக பிரித்தானிய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரித்தானிய உள்துறை அலுவலகம் முறையீடு செய்யவில்லை எனினும் அவர் மீண்டும் பிரிட்டனிற்கு திரும்புவதற்கான விசாவை வழங்கும் ஏற்பாடுகளை மந்தகதியில் முன்னெடுத்தது. இந்த செயற்பாடுகள் பல மாதங்கள் நீடித்தன.இதன் காரணமாக அவர் இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் வசிக்கவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டார்.
எம்டிசி சொலிசிட்டர்சனின் நாக கந்தையா உள்துறை அமைச்சின் தாமதங்கள் தொடர்பில் நீதி மறுஆய்வினை முன்னெடுத்ததை தொடர்ந்தே அதிகாரிகள் சுதர்சன் இதயசந்திரனிற்கு மீண்டும் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.அதற்காக மன்னிப்பு கடிதமொன்றையும் வெளியிட்டனர்.அந்த கடிதத்தில் தாமதங்களிற்கு அதிகாரிகள் காரணமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே 19 ம் திகதி இலங்கையில் இதயசந்திரன் அவர் தங்கயிருந்த இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.செப்சிஸ் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து இருந்ததால் அவர் மனஉளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என தெரிவித்துள்ள அவரது அவர் ஒழுங்காக உணவருந்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
Comments are closed.