ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை

14

ஜெனீவாவினால் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால்சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஜெனீவாவில் 46/1 பிரேரணைக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிக்கள பொறிமுறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பவுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சிகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளே குறித்த வெளிக்கள பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

46/1 பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ள

இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் உலக நாடுகளிடம் கலந்தாலோசித்துள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றால் அவர்களை வெளிநாடுகளில் கைது செய்யக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. அது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.” என்றார்.

Comments are closed.