இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2024, குரோதி வருடம் ஆடி 15, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பேச்சைக் கட்டுப்படுத்தி செயலில் கவனம் செலுத்தவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்பின் மூலம் நிச்சய முன்னேற்றம் உண்டு. சிலருக்கு பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும். இன்று கடன் கொடுப்பது, கடன் வாங்குவது தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் காடின உழைப்பு தேவைப்படும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களின் தன்னம்பிக்கை, வீரம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களின் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை போக்குவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சில விஷயங்களுக்காக மன அழுத்தம் ஏற்படும். இன்று உங்களின் உடல் நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிக போட்டியை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடினமான நேரத்தில் தந்தையின் ஆலோசனை தேவைப்படும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பயனுள்ள விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். உங்களின் பொருள், வசதி அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் மன அழுத்தம் ஏற்படும். இன்று கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம். வண்டி, வாகன பயன்பாட்டில் நிதானம் தேவை. உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் ஒருவித சஞ்சலம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிக்க முடியும். உங்கள் செயல்பாட்டில் சோம்பலை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்படவும். உங்கள் பேச்சில் கட்டுப்பாட அவசியம். ஆன்மீக நடவடிக்கையில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முயற்சிகள் சிறப்பான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த முயலவும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முயற்சிகளுக்கு முழு பலனை பெறுவீர்கள். இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். மனைவியுடன் காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வணிகத்தில் போட்டி அதிகரிக்கும். உங்கள் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு பரிசு, கௌரவம் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து வாங்குவது, முதலீடு செய்வதற்கான சிறப்பான நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியது இருக்கும். இன்று உங்களின் முயற்சிகள் நற்பலனை தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசாங்கம் தொடர்பான வேலைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி, கௌரவ உயர்வு உண்டாகும். உங்களின் பண தேவைகள் நிறைவேறும். இன்று வருமானம் மற்றும் செலவுகளைச் சமநிலையில் பராமரிப்பது அவசியம். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மன வருத்தம், பழைய சண்டைகளில் இருந்து இருந்து விடுபடுவீர்கள். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் உறவு இனிமையாக இருக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதேனும் செய்ய திட்டமிட்டுள்ள அவர்களுக்கு அதில் பெரிய வெற்றியை பெறலாம். உங்களின் முயற்சிகளுக்கு தகுந்த பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
Comments are closed.