ஜனாதிபதி வேட்பாளர் யாரேனும் பாதாள மற்றும் குண்டர்களின் ஆதரவைப் பெற முற்பட்டால் அவசர பொலிஸ் பிரிவி்ற்கு உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 பிரிவுகளில் அமைந்துள்ள அவசர பொலிஸ் அறைக்கு உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அந்த பாதுகாப்பில் எவரேனும் திருப்தியடையாத பட்சத்தில், அதற்கான காரணங்கனை கூறும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த அனைத்து வேட்பாளர்களும் உழைக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் மூன்று சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.