மாநாடு படத்திற்கு பிறகு புயல் வேகத்தில் படங்கள் கமிட்டாவது, நடிப்பது என செய்து முடிக்கிறார்.
இப்போது அவரைப் பற்றிய ஒரு தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் கேரக்டர் லுக் வெளியாகி இருந்தது.
கடந்த ஜனவரியின் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் அடுத்தடுத்து செர்பியா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க அவரின் 48வது படம் துவங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தக் லைஃப் படத்தின் காரணமாக சிம்பு 48 படத்தில் படப்பிடிப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கியுள்ள சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அப்டேட் போட்டுள்ளார்.
அதாவது தக் லைஃப் படத்தின் டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டுள்ளார், அவர் டப்பிங் பேசி முடித்துள்ளதாக தெரிகிறது.
Comments are closed.