தமிழக வெற்றி கழகம் சார்பில் தளபதி விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் தளபதி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விலையில்லா வீடுகள் தமிழகம் முழுவதும் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே இரண்டு பயனர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சிவன் கோயில் தெருவில் உள்ள பாபு மற்றும் சபீதா ஆகிய இருவருக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி தொகுதி தலைமை நிர்வாகி சிலம்பரசன் ஏற்பட்டால் கட்டப்பட்ட இந்த இரு வீடுகளையும் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்து பயனாளர்களுக்கு வழங்கினார்.
மேலும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை பயனாளர்களுக்கு வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், “ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
பின்னர் அவரிடம், கட்சி நிர்வாகிகள் கட்டி கொடுக்கும் வீட்டுக்கு விஜய் ரசிகர் வீடு வழங்கும் திட்டம் என்று தானே பெயர் வைக்க வேண்டும். விஜய் இதற்கு பணம் கொடுத்தாரா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு தளபதி பணம் கொடுத்தாரா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா” என்று ஆவேசமாக கேட்டார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட்டனர்.
Comments are closed.