இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2024, குரோதி வருடம் ஆடி 10 வெள்ளிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை கவலை தரும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இந்த தொழில் சார்ந்த விஷயத்தில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில பதட்டமான சூழலில் இருக்கும். இன்று உங்களின் பேச்சு மற்றும் நடத்தையில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சில தடைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அன்றாட செலவுக்காக அதிக பணம் செல்ல விட வாய்ப்புள்ளது. இன்று அக்கம் பக்கத்தினரின் உதவி கிடைக்கும். சமய காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை மற்றும் புதிய முதலீடுகள் சிறப்பான வெற்றியை தரும். குடும்பத்தில் சில பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் திருமணம் குறித்த நல்ல செய்தி கேட்பீர்கள். பெற்றோருக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சூழல் இருக்கும். எந்த நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க சோம்பலை கைவிட்டு செயல்படவும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வேலைகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்கள் வேலையை புத்திசாலித்தனம் மற்றும், விவேகத்துடன் செயல்படவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்ப உறவுகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க சரியான திட்டமிடல் அவசியம். இன்று உங்கள் வேலை தொடர்பான விஷயத்தில் கடினமான சூழல் இருக்கும். இன்று குடும்பம் மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஏதேனும் ஒரு வகையில் திடீர் பணவரவு ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரம் அமையும். இன்று உங்களுக்கு மன அமைதி தரக்கூடிய நாள். ஆன்மீகம், சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ப்பீர்கள். உங்களின் சிறப்பான திறமையால் வேலைகளை முடிப்பதிலும், புதிய நண்பர்களை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கவனமாக செயல்படவும். இன்று நண்பர்களுக்கு உதவும் முன் வருவீர்கள். பணியிடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்தவும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். போட்டித் தேர்வில் மாணவர்கள் நல்ல வெற்றியை பெற முடியும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் கஷ்டங்கள் குறையும். பணி சுமை அதிகமாக இருக்கும் என்பதால் உடல்நிலை மோசமடையும். இன்று உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சரியாக திட்டமிட்டு செயல்படவும். மாணவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். இன்று ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களின் உணவு பழக்க வழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் உறவு வலுவடையும். விடாமுயற்சியுடன் செய்யக்கூடிய வேலையில் சிறப்பான வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையை சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். காதலுக்காக நேரத்தை ஒதுக்க முடியும். குடும்ப சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் புகழ் அதிகரிக்கும். சொத்து தொடர்பான முதலீடுகள் செய்ய சிறந்த நாள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்காலம் தொடர்பாக புதிய திட்டங்களில் ஈடுபடுகிறீர்கள். உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்தால் நல்ல வெற்றி பெறலாம். வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் செய்வீர்கள். முக்கிய விஷயத்தில் குடும்பத்தினரின் ஆலோசனை உதவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தினர் மீது அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று பணி சுமையால் சற்று கவலை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் அக்கறை தேவை. உறவினர்களிடமிருந்து அனுகூலமான வாய்ப்புகளை பெறுவீர்கள். வியாபாரிகள் லாபத்தை அடைய பணிச்சுமையை சந்திக்க நேரிடும்.
Comments are closed.