ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு: அறையில் கடிதம்

19

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த 22 வயது மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடுகன்னாவ, பிரிமத்தலாவ, பரகடவெல்ல, கிராகமவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்த நிலையில் இந்த தவறான முடிவினை எடுத்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாணவனின் அறையில் “அம்மா…கவலைப்படாதே “நான் கிளம்புகிறேன்” என்று எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது தாயார் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் எனவும், நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசிகளில் அடிமையாகியிருந்துள்ளமையும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தினத்தன்று மாணவனின் அறைக்கு பெற்றோர் சென்றபோது அவர் அங்கு இல்லை எனவும், இதனையடுத்து மாணவனின் மூத்த சகோதரர் கடுகன்னாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் வந்து சோதனை செய்தபோது, ​​தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமான மீட்கப்பட்டுள்ளார்.

முட்களுடன் கூடிய மரம் என்பதால் உடலில் தழும்புகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கசுன் ஏகநாயக்கவினால் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன, கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவித்ள்ளார்.

Comments are closed.