இன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ((Ramanathan Archchuna) அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பம் இருக்கவில்லை என்றும் ஆனால் இன்று தான் நேரடி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது தனிப்பட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் சொந்த கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் இணையும் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெரும்பாண்மையான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல்வாதியாக தான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.