இன்றைய ராசிபலன் ஜூலை 24, 2024, குரோதி வருடம் ஆடி 8, புதன் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, வியாபாரத்தில் அதிகபட்சமாக ஏற்படும். குடும்பம், காதலுக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மன வருத்தம் சேரும். பிறரின் நட்புக்கரம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஆர்டர் பெறலாம்.உணவில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வேகத்தை பெறுவீர்கள். நிதிநிலை வலுவாக இருக்கும். இன்று சில தேவையற்ற செலவுகள் ஏற்படும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு பயனுள்ள நாளாக அமையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். தொழிலதிபர்கள் பண ஆதாயம் பெறுவார்கள். இன்று உங்களின் நிதிநிலை வலுப்படும். எதிர்காலம் தொடர்பான கவலை குறையும். திருமண வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்கள் சற்று மனக்கலக்கம் ஏற்படும். உங்களுக்கு எதிரான சதிகள் சமாளிக்க வேண்டியது இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பண பலன், சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் மன கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பேச்சில் கட்டுப்பாடு தேவை.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் சில சிரமங்களைச் சந்தித்தாலும் செய்து முடிக்க முடியும். பணியிடத்தில் பிறரிடம் பணிவுடன் செயல்படவும்.. உங்களின் நிதி நிலை சிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும். பெரியவர்களுக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படும். அதற்காக பணம் செலவிட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். முதலீடு தொடர்பான விஷயத்தில் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் இணைத்து அனைத்து வேலைகளையும் எளிதாக முடிக்க முடியவில்லை. தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கடினமான நாளாக அமையும். எனவே எந்த ஒரு வேலையிலும் யோசித்து முடிவு எடுக்கவும்.வியாபாரம் தொடர்பாக பிரச்சனைகளை சமாளிக்க நேரிடும். உங்கள் வேலைகளை முடிப்பதில் திட்டமிட்டு செயல்படவும். இன்று உங்களின் பேச்சில் கவனம் தேவை. உங்களின் சிரமங்கள் தீரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஏதேனும் சட்ட தகராறுகள் இருந்தால் அது முடிவடையும். பண பலன் பெறுவீர்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று கடன் வாங்குவது, கொடுப்பதைத் தவிர்க்கவும். இன்று முக்கிய பணிகளை முடிப்பதில் சோம்பலை விட்டு செயல்படவும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வணிகர்களுக்கு சிறப்பான நாள். உங்கள் வேலையில் சில நல்ல வாய்ப்புகள் பெறுவீர்கள். இருப்பினும் வாய்ப்புகளை சரியாக சிந்தித்து பயன்படுத்திக் கொள்ளவும். அரசியலில் உள்ளவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்கவும். தொழில்துறையில் சிறப்பான வாய்ப்புகள் அமையும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகள் பிரச்சினைகளுக்கு சிறப்பான தீர்வுகள் காண்பீர்கள். இன்று காப்பீடு, நிதிநிலை தொடர்பாக சிந்தித்து செயல்படவும். தொழில் தொடர்பாக பயணங்கள் நற்பலனை தரும். மாணவர்கள் படிப்பின் முன்னேற்றம் ஏற்படும். கடினமான நேரத்தில் வாழ்க்கை துணியின் ஆலோசனை வெற்றிக்கு உதவும். முதலீடுகள் செய்ய சாதகமான நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சாதுரியத்தால் பிரச்சனைகளை சிறப்பாக தீர்க்க முடியும். கடினமான சூழ்நிலையிலும் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். இன்று பிறர் மீது அன்பு காட்டவும். தாயின் உடல்நிலை சற்று பாதிப்பு ஏற்படும். பணியிடத்தில் சில சச்சரவுகள் சந்திக்க நேரிடும்.
Comments are closed.