நாட்டின் பண வீக்கத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

16

நாட்டின் பணவீக்கம் மே மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூன் மாதம் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024 மே மாதம் 1.6 சதவீதமாக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மே 2024 இல் 0.5 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மே 2024 இல் 2.4 சதவீதமாக இருந்து ஜூன் 2024 இல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments are closed.