தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் வில்லனாக கலக்கிக்கொண்டு இருப்பவர் எஸ்.ஜே. சூர்யா.
ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என அழைத்து கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார்.
தொடர்ந்து இயக்குனராக படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என முடிவு செய்தார். ஹீரோவாகவும் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால், திடீரென இவருடைய சினிமா வாழ்க்கை சரிவை சந்தித்தது.
கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கு முன் இசை படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். இறைவி படத்தின் மூலம் சிறந்த நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றார். தொடர்ந்து ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கிக்கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இன்று 56வது பிறந்தநாள்.
இந்த நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த வாரம் இந்தியன் 2 வெளிவந்த நிலையில், அடுத்த வாரம் ராயன் வெளிவரவுள்ளது. மேலும் இவர் கைவசம் வீர தீர சூரன், சர்தார் 2, இந்தியன் 3, கேம் ஜேஞ்சர், Saripodhaa Sanivaaram, Love Insurance Corporation ஆகிய படங்கள் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.