எங்களுக்கு இடையே இருக்கும் புரிதலுக்கு முக்கிய காரணம் இதுதான்!! நடிகை நீலிமா ஓபன் டாக்..

17

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரை தொடர்களில் வில்லி, ஹீரோயினாக நடித்து அசத்தி வருபவர் தான் நடிகை நீலிமா.

இவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நீலிமா சினிமாவை தாண்டி பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

நிலீமா ராணி, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், திருமணம் குறித்து நீலிமா ராணி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “என்னுடைய கணவர் இசைவாணனை கடந்த 20 ஆண்டுகளாக தெரியும். எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தது அவர்தான். எங்களுக்குள் இருக்கும் புரிதலுக்கான முக்கிய காரணம் வயது வித்தியாசம்தான்”.

“வயது வித்தியாசம் இருப்பதால் ஒருவர் பக்குவமாகவும், இன்னொருவர் அரைகுறையாகவும் இருப்பார்கள். இதனால் அவர்களுக்குள் சமமாக இருக்கும். இருவருமே பக்குவமாக இருந்தால் வாழ்க்கை சிக்கல் ஆகிவிடும். அதனால் கணவன் மனைவி இடையே வயது வித்தியாசம் இருக்க வேண்டும்” என்று நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.

Comments are closed.