லோகேஷ் கனகராஜ் – கார்த்தி கூட்டணியில் உருவாகி 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கைதி 2. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர்.
2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தின் இறுதியில் கார்த்தி யார், அவருக்கும் வில்லன் அடைக்கலத்திற்கும் இடையே என்ன பகை என கேள்வி எழுந்தது.
இந்த கேள்விக்கான பதில் கைதி 2 படத்தில் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் அதற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் காரணமாக கைதி 2 படம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
மேலும் இப்படத்தை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் LCU-வில் கைதி படத்தை இணைந்துள்ளனர். ஏற்கனவே கைதி 2 படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்க LCU வேற இதில் இணைந்துவிட்டது.
இந்த நிலையில் கைதி 2 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது என்பது குறித்து நடிகர் கார்த்தி பேசியுள்ளார். இதில் தற்போது மெய்யழகன் மற்றும் வா வாத்தியாரே படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அடுத்தது சர்தார் 2 மற்றும் கைதி 2 தான் என கூறியுள்ளார்.
மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க நேரம் வந்துவிட்டது. அடுத்த ஆண்டு கைதி 2 படப்பிடிப்பு துவங்கும் என கூறினாராம். இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Comments are closed.