2024 பிரித்தானிய பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு: 410 இடங்களைக் கைப்பற்றும் கட்சி!

9

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பிரித்தானிய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நேற்று, வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 3 மணியளவில் கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

BBC-யில் வெளியிடப்பட்ட BBC-Ipsos கருத்துக் கணிப்பு முடிவுகளில், தொழிலாளர் கட்சி 410 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களைப் பெறலாம் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் உள்ள 650 இடங்களுக்கு வாக்குச் சீட்டு மூலம் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கருத்துக்கணிப்பின்படி, யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
Labour Party: 410 இடங்கள்

Conservativ Party: 131 இடங்கள்

Liberal Democrats: 61 இடங்கள்

Reform UK: 13 இடங்கள்

Scottish National Party: 10 இடங்கள்

Green Party: 2 இடங்கள்

மற்றவை: 23 இடங்கள்

பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. ஆனால், அக்கட்சியின் தலைமைக் குழுவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் கட்சி 4 முறை பிரதமரை மாற்றியுள்ளது.

செய்தி நிறுவனமான AFP இன் அறிக்கையின்படி, வியாழன் அன்று, தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, லண்டன் பங்குச் சந்தை மற்றும் பவுண்ட் டாலருக்கு எதிராக உயர்வை பதிவு செய்தன. கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்வியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முறை, பிரித்தானியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இடங்களை வழங்கியுள்ளன. இம்முறை மொத்தம் 107 பிரிட்டிஷ் இந்திய வேட்பாளர்கள் இடங்கள் பெற்றுள்ளனர். தொழிலாளர் கட்சி அதிகபட்சமாக 33 வேட்பாளர்களுக்கு இடம் வழங்கியது. அதே நேரத்தில், கன்சர்வேடிவ் கட்சி மொத்தம் 30 வேட்பாளர்களுக்கு இடம் வழங்கியது.

Comments are closed.