மொட்டு கட்சி ரணிலுக்கு விதித்த நிபந்தனை

17

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு அதிபர் வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை.

எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம்எமது கட்சி மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்.” என தெரிவித்துள்ளார்.

அதன்போதே, ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டால் அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்குவதை பரிசீலிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.